புதிதாக உதயமான தமிழர் விடுதலை கூட்டணி கட்டுப்பணத்தையும் செலுத்தியது

Report Print Suman Suman in தேர்தல்

புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பான “தமிழர் விடுதலைக் கூட்டணி” சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே இக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேசசபையின் முன்னாள் உப தலைவர், வலிகிழக்கு பிரதேசசபையின் முன்னாள் தலைவர் உதயகுமார் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் அ.ஆனந்தராஜ் உள்ளிட்டவர்களே கட்டுப்பணத்தை இன்று காலை 9.30 மணிக்கு செலுத்தியுள்ளனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இணைந்து, ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.