தேர்தல் தொடர்பான முதல் பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in தேர்தல்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக முதலாவது பேச்சுவார்த்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று நடைபெற்றது.

தேர்தல் செயலகத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் போது இருக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான ஏற்பாடுகள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்க உள்ளதாக பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.