தேர்தல் முடிவுகள் பல மாற்றங்களை ஏற்படுத்தும்! ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல், உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட தேர்தல் அல்ல என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. அதுவரை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

மேலும் தற்போதைய அரசாங்கத்தின் இருப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்த இந்த தேர்தல் மூலம் ஒரு முடிவுக்கு வர முடியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அடைந்துள்ள நிலைமையின் அடிப்படையில் கூட்டு எதிர்க்கட்சியை இணையுமாறு அழைப்பு விடுக்கின்றனர். எனினும் அது உண்மையான தேவை கருதிய அழைப்பு அல்ல.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பது எதிர்வரும் தேர்தலில் சரியான அறிந்து கொள்ள முடியும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.