சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவை தாக்கல் செய்த ஐக்கிய தேசியக் கட்சி

Report Print Sumi in தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சி யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.

குறித்த வேட்புமனுவை இன்று காலை யாழ்.மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கியத் தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்ட அமைப்பாளர், வேட்பாளர்கள் ஆகியோர் யாழ். மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலரிடம் தங்கள் வேட்புமனுவை கையளித்துள்ளனர்.