உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்தது இ.தொ.கா

Report Print Gokulan Gokulan in தேர்தல்

தலவாக்கலை, லிந்துலை நகரசபை மற்றும் நுவரெலியா மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று காலை தாக்கல் செய்துள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் குறித்த வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை உள்ளிட்ட இ.தொ.காவின் முக்கியஸ்த்தர்கள் பலர் இணைந்து வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

தலவாக்கலை, லிந்துலை நகரசபையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தும், சேவல் சின்னத்திலும் இ.தொ.கா போட்டியிடவுள்ளதுடன், நுவரெலியா மாநகரசபையில் தனித்து சேவல் சின்னத்திலும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.