வேட்புமனுக்கள் நிராகரிப்பு: சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது மஹிந்த அணி

Report Print Ajith Ajith in தேர்தல்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் சில உள்ளூராட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வெலிகம, மஹரகம, பாணந்துறை முதலான நகர சபைகள் மற்றும் அகவலத்தை, பதுளை மற்றும் மஹியங்கனை முதலான பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் தெய்யத்தகண்டிய மற்றும் பதியத்தலாவை முதலான பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.