93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 30 அரசியல் கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல்!

Report Print Kamel Kamel in தேர்தல்

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 30 அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

எதிர்வரும் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 30 அரசியல் கட்சிகள் வேட்பு மனக்களை தாக்கல் செய்துள்ளன.

மேலும் 49 சுயாதீன குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 496 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் 447 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.