மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நிறைவு!

Report Print Kumar in தேர்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதேசசபைகளுக்கும், ஒரு நகர சபைகளுக்குமான வேட்பு மனுதாக்கல் செய்யும் பணிகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெற்றுள்ளன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 அரசியல் கட்சிகளும், ஆறு சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மா.உதயகுமார் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் ஒரு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று பிரதேசசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேசசபை, ஏறாவூர்ப்பற்று பிரதேசபை, ஏறாவூர் நகரசபை, மண்முனைப்பற்று பிரதே சசபை ஆகிய சபைகளுக்கு 54 கட்சிகள், குழுக்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளன.

எனினும், 41 கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களே வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.