வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை குறித்து வழக்குத் தாக்கல் செய்யப்படும்: பைசர் முஸ்தபா

Report Print Kamel Kamel in தேர்தல்

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை குறித்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தெஹியத்த கண்டிய மற்றும் பதியதலாவ ஆகிய பிரதேச சபைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றில் மேன்முறையீடு செய்து ஏதேனும் நிவாரணம் பெற்றுக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் எந்தவொரு கட்சியும் மேன்முறையீடு செய்யப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.