வவுனியாவில் 114,599 பேர் வாக்களிக்க தகுதி

Report Print Steephen Steephen in தேர்தல்

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

வவுனியா நகர சபைக்கு 12 உறுப்பினர்களும் ஏனைய பிரதேச சபைகளுக்கு 51 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.

வவுனியா நகர சபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 20 ஆயிரத்து 300 வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 14 உறுப்பினர்களை செய்ய 12 ஆயிரத்து 166 வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.

செட்டிக்குளம் பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட உள்ளதுடன் 16 ஆயிரத்து 680 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

வவுனியா தமிழ் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதுடன் 55 ஆயிரத்து 5 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

வவுனியா சிங்கள பிரதேச சபைக்கு 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். அங்கு 10 ஆயிரத்து 448 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைப் பிரிவில் நிரந்தர வாக்காளர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் முல்லைத்தீவு மற்றும் ஏனைய தமிழ் பிரதேச சபை பிரிவுகளில் வாக்காளர்களாக இருப்பது வவுனியா மாவட்டத்தில் காணக்கூடிய விசேட நிலைமையாகும்.