உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும்

Report Print Ajith Ajith in தேர்தல்
32Shares

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடத்தப்படும். பெப்ரவரி மாதம் ஆறாம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது.

இந்த நிலையில், சனிக்கிழமை தினமொன்றை எடுப்பதானால், பெப்ரவரி 10 அல்லது 17 ஆகிய இரு நாட்களையே எடுக்க முடியும். இல்லாவிட்டால் பெப்ரவரி 8 அல்லது 12 ஆகிய திகதிகளில் ஒன்றை எடுக்க வேண்டும்.

இந்த நான்கு நாட்கள் தொடர்பில் மிகவும் தீவிர கலந்துரையாடல்களை நடத்தி, பெப்ரவரி 10 ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

எனினும், தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 26ஆம் திகதியே வெளியிட முடியும். அதுவரை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியாது.

ஏனெனில், 35 நாட்களுக்கு அதிகமாகவும் 49 நாட்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் என்ற வரையறையை கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.