ஆசனப் பங்கீட்டில் முரண்பாடு: தேர்தலிலிருந்து ஒதுங்கியது புளொட்

Report Print Ajith Ajith in தேர்தல்

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த உள்ளூராட்சி மன்றங்களின் ஆசனப் பங்கீடு தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியுடன், டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் முன்னர் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தன.

இதன்படி உள்ளூராட்சி சபையில் தலைவராக பதவி வகிக்கக்கப் போகும் தமிழரசு கட்சிக்கு 60 சதவீத ஆசனங்களும், ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் தலா 20சதவீத ஆசனங்களும் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் இன்று குறித்த இரண்டு கட்சிகளுக்கும் கிளிநொச்சியில் உள்ள கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் தலா ஒரு ஆசனமே வழங்கப்படும் என்று தமிழரசு கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து புளொட் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.