யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனு தாக்கல்

Report Print Sumi in தேர்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்டம் முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

குறித்த வேட்புமனுக்கள் இன்று காலை யாழ். உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளதாக எமது செதியாளர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திலுள்ள ஒரு மாநகரசபை, மூன்று நகரசபைகள் மற்றும் 12 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உள்ளிட்டவர்கள் இணைந்து வேட்புமனுக்களை யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்துள்ளனர்.

Latest Offers