தேர்தல் முறைமை சிறு கட்சிகளுக்கு பெரும் ஆபத்து!

Report Print Kamel Kamel in தேர்தல்
32Shares

நடப்பு தேர்தல் முறைமை சிறு கட்சிகளுக்கு பெரும் ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

இந்த தேர்தல் முறைமை சிறு கட்சிகளுக்கு பொருந்தக் கூடியதல்ல எனவும், ஆளணி பலம் குறைவாக காணப்படுவதனால் தேர்தலில் இம்முறை தமது கட்சி போட்டியிடவில்லை எனவும், முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜே.வி.பி கட்சியும் இன்று தனது வேட்பாளர் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.

போதியளவு ஆட்கள் இல்லாத காரணத்தினால் இந்த தேர்தலில் நாம் போட்டியிடவில்லை.

நாடு முழுவதும் சென்று இந்த தேர்தல் முறைமையின் தவறுகள் குறைபாடுகள் குறித்து தெளிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

சிறு கட்சிகளை அழித்து பெரிய கட்சிகள் எதிர்வரும் 2020ம் ஆண்டில் வெற்றியீட்ட முயற்சித்து வருகின்றன என துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.