நாடு முழுவதும் 14 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு

Report Print Manju in தேர்தல்
28Shares

டிசம்பர் 9 ம் திகதி முதல் 22 ம் திகதி வரை நாடு முழுவதும் 14 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், வேட்பு மனுக்களை சூறையாடல், போலி வேட்பு மனுக்களை சமர்ப்பித்தல் மற்றும் சேதமடைந்த சுவரொட்டிகள் தொடர்பான மீறல்களே பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பதின்மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் நிக்கவரெட்டிய, கஹவத்த, கொபேகேன், மஹாவா மற்றும் அம்பன்போலா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.