யாழில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள நிலை!

Report Print Murali Murali in தேர்தல்
690Shares

யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முன்மொழியப்பட்டிருந்த 13 வேட்பாளர்களின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், யாழ். மாநகரசபைக்கு போட்டியிடுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

இதில் வேட்பாளராக இடம்பெற்ற ஒருவர் ஏனைய 12 வேட்பாளர்களுக்கும் சமாதான நீதிவானின் உறுதிப்படுத்தல் கையொப்பமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒட்டுமொத்த வேட்புமனுவையும் நிராகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், இறுதியில் வட்டார அடிப்படையில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்திருந்த 13 பேரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 27 வட்டாரங்களை கொண்ட யாழ். மாநகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 14 பேர் மாத்திரமே தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியாகவிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.