மட்டக்களப்பில் முன்னாள் முதலமைச்சர் உட்பட ஆதரவாளர்கள் கைது

Report Print Kumar in தேர்தல்

மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வரதராஜப்பெருமாள் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வேட்பாளர்களின் அறிமுக துண்டுப்பிரசும் விநியோகம் செய்த போதே தாங்கள் பொலிஸாரினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவித்தாட்சி அதிகாரியுமான மா.உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்ஆணையாளர் சுசீலன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து தாங்கள் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு முறையான அறிவுறுத்தல்களை தேர்தல்கள் திணைக்களம் வழங்க வேண்டும். மாதிரி வாக்கு சீட்டுதான் விநியோகிக்க முடியாது.

வேட்பாளர்கள் கட்சியின் சின்னத்தினை கொண்ட துண்டுப்பிரசுரங்களை வெளியிட முடியும் என்பதை தெரியாதவர்களாக இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.