ஒவ்வொரு சபைக்கும் இம்முறை தனித்தனி தேர்தல் அறிக்கை: த.தே.கூ இன் முடிவு

Report Print Rakesh in தேர்தல்

ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்குமான அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கிய தனியான தேர்தல் அறிக்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இம்முறை வெளியிடப்படவுள்ளது.

கூட்டமைப்பின் பொதுவான தேர்தல் அறிக்கைக்கு மேலதிகமாகவே தனித்தனியான தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்படவுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பரப்புரைப் பணிகள் மெதுமெதுவாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர்களுடன் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சந்திப்பு நடத்தி முடித்துள்ளது.

தைப்பொங்கலை அண்மித்த காலப் பகுதியில் கூட்டமைப்பின் பிரதான தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதனைத் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தனித்துவமான தேர்தல் அறிக்கையும் கூட்டமைப்பால் வெளியிடப்படவுள்ளது.

அந்தந்த உள்ளூராட்சி சபைகளின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், எதிர்கால அபிவிருத்திச் செயற்றிட்டங்களை உள்ளடக்கியதாக அந்தத் தேர்தல் அறிக்கை அமையவுள்ளது என்று கூட்டமைப்பு தெரிவித்தது.