இரவு 7 மணியின் பின்னர் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் நடத்தத் தடை

Report Print Kamel Kamel in தேர்தல்

இரவு ஏழு மணியின் பின்னர் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரவு ஏழு மணிக்கு மேல் வீடு வீடாகச் சென்று தமக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்று நிருபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை குழுக்கள் மற்றும் கட்சி கொடிகளை ஏந்திக் கொண்டு வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்று நிருபத்திற்கு முரணான வகையில் செயற்படும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை இழக்க நேரிடலாம் என சுற்று நிருபத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.