தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நா.உ சிறீதரன் பிரச்சாரம்

Report Print Samaran Samaran in தேர்தல்

நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரம் நேற்றையதினம் பூநகரி பிரதேசத்தில் நடைபெற்றது.

பூநகரி பிரதேசசபையின் கரியாலை வட்டாரத்தில் போட்டியிடும் கணபதிப்பிள்ளை தரமராசா என்ற வேட்பாளரை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவருடன் இணைந்து கிராமத்தின் மூத்த பிரஜைகள் மற்றும் இளைஞர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.