புதுக்குடியிருப்பில் வேட்பு மனுவில் கைச்சாத்திட முற்பட்டபோது தடுக்கப்பட்ட பெண் வேட்பாளர்

Report Print Samaran Samaran in தேர்தல்

புதுக்குடியிருப்பில் பெண் வேட்பாளர் ஒருவர் வேட்புமனுவில் கைச்சாத்திட முற்பட்டபோது தடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் விசேட குழுவொன்று அனுப்பப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.