மஹிந்தவின் அபிவிருத்தி திட்டத்தை நிறுத்திய மைத்திரி

Report Print Evlina in தேர்தல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அரசாங்கம் நிறுத்தி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணி உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்தை கொழும்பில் இன்று முன்னெடுத்துள்ளது. இதன் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை, கொழும்பு மாநகரத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுகளுக்கும் சென்று மக்களின் பிரச்சினையை கேட்டு அறிந்து கொண்டுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.