யாழில் தபால் மூலம் வாக்களிக்க 17, 273 பேர் தகுதி

Report Print Sumi in தேர்தல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தபால் மூலம் வாக்களிக்க யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தவர்களில், 17 ஆயிரத்து 273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும்,தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 22 ஆம் மற்றும் 25,26 ஆம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக்கமுடியும். 22ஆம் திகதி தேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும், தபால் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் என தெரிவிக்கப்பபட்டுள்ளது.

அத்துடன் 25, 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச அலுவலகங்கள் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், போக்குவரத்துச் சபை டிப்போக்கள், பாதுகாப்பு படை முகாம்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களில் தபால் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியுமென்றும் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.

Latest Offers