இரண்டு கட்சிகளில் போட்டியிடும் கணவனும், மனைவியும்

Report Print Steephen Steephen in தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கு இரண்டு கட்சிகள் ஊடாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவனும், மனைவியும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக கணவனும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக மனைவியும் போட்டியிடுகின்றனர்.

நாவல, விமல விகாரை வீதி என்ற முகவரியில் வசிக்கும் அமதோருகே கிங்ஸ்லி தயாரத்ன அமரதுங்க மற்றும் தல்பாவில கங்காணம்கே கீதிகா பிரியதர்ஷனி ஆகியோரே இவ்வாறு இரண்டு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

இரண்டு கட்சிகளில் உப பட்டியல் வேட்பாளர்களாக இருவரும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.