மைத்திரியுடன் இணைந்தார் பொதுஜன முன்னணியின் அமைப்புச் செயலாளர்

Report Print Steephen Steephen in தேர்தல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்புச் செயலாளர் அனுருத்த பொல்கம்பல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதியுடன் இணைந்துக்கொண்டுள்ளார்.

பொல்கம்பலவை தவிர இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் உட்பட பல உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வெற்றிக்காக பாடுபட போவதாக அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.