அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகம் ஆரம்பம்

Report Print Mubarak in தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகம் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

பொலிஸாரின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களிடம் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இம்முறை, 5 இலட்சத்து 60 ஆயிரத்து 536 அரச பணியாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 24ஆம், 25ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.