வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 3,226 பேர் தகுதி

Report Print Thileepan Thileepan in தேர்தல்

வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க மூவாயிரத்து 226 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மூவாயிரத்து 471 அரச சேவையாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் உரிய முறையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யாமை, திணைக்கள தலைவரின் கையொப்பம் பெறாமை உள்ளிட்ட சில காரணங்களால் இருநூற்று 45 பேரின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மூவாயிரத்து 226 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.