தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அதிகாரிகளின் கவனத்திற்கு

Report Print V.T.Sahadevarajah in தேர்தல்

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடமையாற்றவிருக்கும் சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் அனைவரும் நாளை(9) மு.ப. 8.30மணிக்கு அம்பாறை நகரசபை மைதானத்திற்கு சமூகமளிக்கவேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

நகரசபைக்குரிய எச்.எம்.வீரசிங்க விளையாட்டரங்கில் விசேடமாக அமையப்பெற்றுள்ள கருமபீடத்தில் உரிய விதிமுறையான நியமனக்கடிதம் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் வாக்கு எண்ணும் கடமைக்கான நியமனக்கடிதமும் அந்த சந்தர்ப்பத்தில் வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அறிவுறுத்தலின்படி அங்கு உரிய ஆவணங்களோடு வாக்குப்பெட்டிகள் பொலிஸார் சகிதம் உரிய வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் குறித்த வீதியால் செல்லவேண்டும்.

தேர்தல் தினத்தன்று காலை 7 மணிமுதல் தொடர்ந்து மாலை 4 மணிவரை வாக்களிப்பு சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். வாக்களிப்பு நிலையத்தின் முழுப்பொறுப்பும் நீங்கள்தான் என அவர் இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.