கிணற்றுக்கு திறப்பு விழா நடத்தி உலக சாதனை படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Navoj in தேர்தல்

அரசியலுக்கு வந்தவுடன் தங்களை மிஞ்ச யாரும் இல்லை என்று சிலர் நினைக்கின்றார்கள். இனவாதம் பேசி இன்னும் அரசியலில் தன்னை தக்கவைக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நினைக்கின்றார் என்று முன்னாள் பிரதி அமைச்சரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமாகிய சோ. கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு - தும்பங்கேணியில் நேற்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வியாளேந்திரன் கடந்த மூன்று வருடகாலமாக செய்த தாரக மந்திரம் இரண்டுதான். ஒன்று முஸ்லிம் பற்றிப் பேசுவது மற்றது சிங்களப் பேரினவாதம் பற்றிபோசுவது.

இவர் நாடாளுமன்றம் தெரிவானது வெறுமனே இவரின் விருப்பத்தின்பால் மக்கள் அளித்த வாக்கல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பில் மக்கள் கொண்ட வெறுப்பே இவருக்கு வாக்களிக்கப்பட்டது.

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்புக்கு வந்து மூன்று வருடமாகின்றது. ஆனால் செய்த அபிவிருத்திகள் எதுவும் இல்லை.

இவர் என்னைப் பார்த்து முன்னர் நீலக் கட்சியில் இருந்தார். இப்போ பச்சைக் கட்சியில் உள்ளார் எனச் சொல்கிறார். இவர் கடந்த தேர்தலில் என்னுடைய நீலக்கட்சியில் வேலை செய்ததனை மறந்துவிட்டாரா?.

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னால் சென்று வாய்ப்புக் கிடைக்கவில்லை. பின்னர் ஆயுதக் குழக்களின் கட்சியான புளொட்டில் போட்டியிட்டவர்.

இப்படிப்பட்டவர் விஸ்வாமித்திரன் மாதிரி என்னிடம் புருடா விடுகின்றார்.

இனவாதம் பேசி மக்களை ஏமாத்தி அரசியலில் தன்னை தக்கவைக்கலாம் என நினைப்பதற்கு மட்டக்களப்பு மக்கள் தயாரில்லை. இவரைப்பற்றி மக்களுக்கு நன்கு தெரியும்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் மக்களுக்காகவும், மாவட்ட அபிவிருத்திக்காகவும் ஆளும் கட்சியில்தான் உள்ளேன். உங்களைப்போல் சொந்த அபிவிருத்திக்காக அரசுக்கு முட்டுக் கொடுப்பவன் அல்ல.

நான் கட்டிய பாடசாலைக் கட்டடங்களை திறக்கவே நேரம் இல்லாமல் இருந்தவன். ஆனால் வியாளேந்திரனைப் போல் கட்டப்பட்ட கிணற்றுக்கு திறப்புவிழா வைத்து உலகசாதனை படைக்க முடியாது. அப்பேற்பட்ட அபிவிருத்தியின் நாயகன்தான் வியாளேந்திரன்.

நாங்கள் அரசாங்கத்தில் இருக்கும் போது நீங்கள் மக்களை ஏமாற்ற நான் அனுமதிக்கப்போவதில்லை என்றார்.