தேர்தலில் வாக்களிக்கும் புதிய முறை தொடர்பான காணொளி

Report Print Steephen Steephen in தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் புதிய முறை தொடர்பான தகவல்கள் அடங்கிய முப்பரிமாண காணொளியை தேர்தல் ஆணைக்குழுவும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து வெளியிட்டுள்ளன.

வாக்களிக்கும் புதிய முறைமை குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பிரதான தேர்தல் செயலகத்திற்கு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

இதன்பின்னர், அங்கிருந்து ஊடகங்களுக்கு முடிவுகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.