இலங்கையில் புதிய வகை வாக்குச்சீட்டுகள்

Report Print Rusath in தேர்தல்

நாட்டிலுள்ள 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் மூதூர் ஆகிய இரு பகுதிகளில் அதி நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மிகச் சிறியதான வாக்குச் சீட்டு பாணந்துறை நகர சபைக்காக போட்டியிடும் கட்சிகள் மற்றும் 3 சுயேட்சைக் குழுக்களை உள்ளடக்கிய வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதி நீளமானது என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபைக்காக 11 அரசியல் கட்சிகள் 5 சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட 16 போட்டித் தரப்புக்களை உள்ளடக்கிய வாக்குச் சீட்டும், மூதூரில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேட்சைக் குழுக்களுடன் 16 போட்டித் தரப்பாரை உள்ளடக்கிய நீளமான வாக்குச் சீட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு 33 உறுப்பினர்களும், மூதூர் பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளதாக கூறப்படுகின்றது.