கூட்டமைப்பு 58 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும்! சுமந்திரன் நம்பிக்கை

Report Print Ajith Ajith in தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுமார் 46 முதல் 58 உள்ளூராட்சி சபைகளில் வெற்றிபெறும் என அதன் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தமது கட்சி பெரியளவான எதிர்ப்பை எதிர்கொள்ளவில்லை என அவர் கூறியதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு குரல்கள் எழுப்பப்பட்டு வந்தாலும், பெரும்பான்மை மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உள்ளனர். ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சினைகளை கொள்கை ரீதியாக எதிர்கொண்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.