கடந்த காலத்தில் நாங்கள் சிறப்பாக செய்து வந்த கிழக்கு மாகாணசபை

Report Print Kumar in தேர்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் வேலையினையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகின்றது.

கடந்த காலத்தில் நாங்கள் சிறப்பாக செய்துவந்த கிழக்கு மாகாணசபையினை தட்டிப்பறித்து முஸ்லிம் முதலமைச்சருக்கு வழங்கி, அனைத்தையும் பறிபோகச் செய்தனர்.

உள்ளூராட்சி மன்றங்களையும் பறித்து தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கவே இவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்.

இவர்கள் ஒரே கூட்டாகவே செயற்பட்டுவருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.