கையடக்கத் தொலைபேசிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை!

Report Print Murali Murali in தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்கதொலைபேசிப்பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை மறுதினம் 10ம் திகதி காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ளது. இதற்காக 13,374 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல், மதுபானம் அருந்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.