40 மாவீரர்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்ட வீரக் கிராமம் இது! கலையரசன்

Report Print Dias Dias in தேர்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்கு களமிறங்கியுள்ளார்கள். இதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

நாவிதன் வெளியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த கிராமம் மாவீரர்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்ட ஒரு வீரக் கிராமம். கடந்த கால யுத்தத்தில் இந்த மண்ணில் 40 மாவீரர்கள் மடிந்துள்ளனர்.

இவர்களுக்கு வாழ்வதற்கு ஆசை இல்லையா? நாங்கள் உயிருடன் இருந்து இந்த மண்ணிற்கு என்ன செய்தோம் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

ஆயுத ரீதியான போராட்டம் இருக்கும் போது நாங்கள் எல்லோரும் மார்பு தட்டி கூறினோம் நாம் அடியான் என்று.

யுத்தம்முடிந்த பிறகு இந்த மண்ணிற்காக என்ன செய்துள்ளேன் என்று நாம் சிந்திக்க வேண்டும். அந்த புனித பணியை நாங்கள் ஒன்று திரண்டு செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.