மட்டக்களப்பில் வாக்களித்த முக்கியஸ்தர்கள்

Report Print Navoj in தேர்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 2 நகரசபை, ஒன்பது பிரதேச சபைகளுக்குமான தேர்தல் இன்று இடம்பெற்று வருவதுடன், வாக்களிப்பதற்கு 380,327 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் அலுவலகமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்பட்டு வருவதுடன், தேர்தல் கடமைகளுக்காக 4,437 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 238 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து 901 பெண் பிரதிநிதிகள் அடங்கலாக 2,736 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது வாக்கினை ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது வாக்கினை வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்திலும் அளித்தனர்.

அத்தோடு பொதுமக்களும் இம்முறை தங்களுடைய வாக்குகளை உற்சாகமான முறையில் அளிப்பதை காணக்கூடியதாக இருந்தது.