விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் தேர்தல்! வவுனியாவின் நிலைமை என்ன?

Report Print Theesan in தேர்தல்

பொலிசார், விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் எவ்வித பாரிய அசம்பாவிதங்களும் இன்றி வவுனியாவில் வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றன.

இன்று நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வவுனியா மாவட்டத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. பிற்பகல் வரையில் 50வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக 1.30மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அரசாங்க அதிபர் தெரிழவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் ஒரு நகரசபைக்கும் நான்கு பிரதேச சபைகளுக்குமான 103அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ளது. இன்றைய தினம் காலை 7மணியளவில் வாக்குப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் தொடர்பிலே 148 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு அதனூடாக தற்போது சவாக்குப்பதிவுகள் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.

இந்த உள்ளுராட்சித் தேர்தலிலே 114599 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். அந்தவகையிலே பிற்பகல் 1.30மணியரையிலும் 50வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அறியக்கிடைத்துள்ளது.

இந்தேரம் வரையில் எவ்விதமான பாரிய முறைப்பாடுகள் எதுவும் எங்களுக்கக்கிடைக்கப்படவில்லை. சுமூகமான முறையிலே அனைத்து வாக்களிக்கும் நிலையங்களிலும் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

வாக்களிப்பு முடிவடைந்ததும் அந்தத்த வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குகளை எண்ணுவதற்காக 56 வாக்குகள் எண்ணும் நிலையங்களைத் தெரிவு செய்துள்ளோம். அந்த நிலையங்களின் ஊடாக வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரவு 8மணியளவிலே தேர்தல் முடிவகளை அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

முதலிலே வட்டார அடிப்படையிலான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு அந்த தேர்தல் முடிவுகள் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு விகிதாசார ரீதியலான முடிவுகளையும் ஒன்று சேர்த்து சபைக்குரிய தேர்தல் முடிவுகளை நாங்கள் இரவு 8மணிமுதல் 9மணிவரைக்குள் வெளியிட எதிர்பார்த்திருக்கின்றோம் என்றோர்.