ஆள் மாறாட்டம் செய்து மோசடி! கரைச்சிப் பிரதேசத்தில் சம்பவம்

Report Print Yathu in தேர்தல்

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபைக்கான உள்ளுராட்சித்தேர்தலில் வாக்குப்பதிவுகளுக்காக இலக்கம் 1 ஸ்கந்தபுரம் அ.த.க.பாடசாலையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஆள் மாறாட்டத்திலான வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேசசபைக்கான உள்ளுராட்சித்தேர்தலில் வாக்குப்பதிவுகள் இன்று நடைபெற்றுள்ளன.

இதில் ஸ்கந்தபுரம் பகுதிக்கான வாக்குப்பதிவுகள் ஸ்கந்தபுரம் இலக்கம்1 பாடசாலையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுகள் இன்று காலை 7.00 மணிமுதல் 4.00 மணிவரை நடைபெற்றன.

இதன்போது ஸ்கந்தபுரம் பகுதியைச்சேர்ந்த சுப்பிரமணியம் புவனேஸ்வரி என்பவர் தனக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டையுடன் வாக்களிப்பு நிலையத்திற்குச்சென்றபோது,

குறித்த பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டைக்குரிய வாக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவரது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரை வெளியில் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட நபர், தன்னுடைய வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.