13 வருடங்களின் பின் இ.தொவின் கைகளுக்கு கிடைத்த வெற்றி

Report Print Shalini in தேர்தல்

13 வருடங்களின் பின் கொட்டகலை பிரதேசசபை தமது கைகளுக்கு வந்துள்ளதாகவும் இது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இ.தொ.காவின் செயலாளர் ஆறுமுகன் தொன்டமான் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் பல சபைகளை இ.தொ.கா கைப்பற்றியுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

மேலும், நுவரெலியா மாவட்ட மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு தாம் தலை வணங்குவதாகவும், இந்த தேர்தலில் தம்மை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஆறுமுகன் தொன்டமான் தெரிவித்துள்ளார்.