தோற்றவர்களும் பட்டியல் வழியாக நியமிக்கப்படலாம்! ​தேர்தல் திணைக்களம்

Report Print Aasim in தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களும் பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்கப்படலாம் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் போது பல்வேறு முக்கிய அரசியல்வாதிகள் தாம் சார்ந்த கட்சிகள் ஊடாக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தனர்.

இந்நிலையில் அவ்வாறு தோல்வியடைந்த பலரும் தங்களை பட்டியல் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக நியமிக்குமாறு தாம் சார்ந்த கட்சிகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தோல்வியுற்ற வேட்பாளர்களை பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்க முடியும் என்று தேர்தல் திணைக்களமும் அறிவித்துள்ளது.

எனினும் போட்டியிடாத அல்லது பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாத வௌியார் எவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியாது என்றும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.