இலங்கை வரலாற்றில் மகிந்த செய்த முக்கியமான செயல்!

Report Print Aasim in தேர்தல்

இலங்கையின் ஆதிக் குடிகளான வேடர் இனத்திலிருந்து பெண்ணொருவர் பொதுஜன பெரமுண ஊடாக பிரதேச சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

மஹியங்கனை, ஹெனானிகல வில் ஆதிவாசிகள் குடியிருப்பைச் சேர்ந்த 37 வயதுடைய டப். எம். சிரோமாலா என்பவரே இவ்வாறு பிரதேச சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

ஹெனானிகல பல்அங்கத்தவர் தொகுதியில் இருந்து இவர் 1369 வாக்குகள் பெற்று தெஹிஅத்தகண்டிய பிரதேச சபைக்குத் தெரிவாகியுள்ளார்.

சாதாரண தரம் வரை படித்துள்ள சிரோமாலா இலங்கையின் ஆதிவாசிகள் மத்தியில் இருந்து தெரிவான முதலாவது மக்கள் பிரதிநிதி என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையினால் அணியினர் செய்த இந்த செயல் வரலாற்றில் முக்கியமானதாக மாறியிருக்கிறது என்கிறார்கள் தென்னிலங்கை முக்கியஸ்தர்கள்.