வாக்குச் சீட்டில் இதயங்களை வரைந்து வாக்களித்த இலங்கைப் பிரஜைகள்!

Report Print S.P. Thas S.P. Thas in தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல வாக்குச் சீட்டுக்களில் புள்ளடிக்குப் பதிலாக இதயங்கள் வரையப்பட்டிருந்தன என்று தேர்தர்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

ஒவ்வொரு கட்சியும் தத்தமது கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்தனவே தவிர, எந்தவொரு கட்சியும் வாக்குச் சீட்டில் எவ்வாறு புள்ளடியிடுவது என்பது தொடர்பில் தெளிவாக சொல்லவில்லை. இவர்களின் இந்தத் தவறுகளின் காரணமாகவே இது நிகழ்ந்துள்ளது.

இதேவேளை, தமிழ் மற்றும் சிங்கள மொழி தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறையே தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.