உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகளை கையேடாக வெளியிட திட்டம்?

Report Print Aasim in தேர்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெறுபேறுகளை நூல் வடிவில் கையேடாக வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் பொதுமக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க முடிந்துள்ளதையிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு உண்மையில் மகிழ்ச்சியடைகின்றது.

தேர்தல் பணிகளின் போது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊழியர் ஒருவரையும் தேர்தல்கள் ஆணைக்குழு இழந்துள்ளது. அதுகுறித்து மனவருத்தப்படுகின்றேன்.

அதே ​நேரம் தேர்தல் பெறுபேறுகள் சனிக்கிழமை இரவு பத்துமணிக்குள்ளாக தயாராகிவிட்டது. ஆயினும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அதனை ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதில் தாமதமேற்பட்டது.

அதற்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுவதில் பலனில்லை. அவ்வாறு குற்றம் சாட்டுவதாயின் என்னை மட்டும் குற்றம் சாட்டுங்கள் என்றும் மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.