தத்தமது உள்ளூராட்சி பிரதேசங்களில் அரைவாசிக்கு மேற்பட்ட தொகுதிகளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வென்ற கட்சிகளே அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளன.
இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு செவ்வாய்க்கிழமை வௌியிட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது அந்தந்த மன்றங்களுக்கான தொகுதிகளில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெற்ற கட்சிகளே அங்கு ஆட்சியமைக்கும்.
அவர்களுக்கே தலைவர்/ மேயர் பதவிகளும் ஏனைய பதவிகளும் வழங்கப்படும்.
அவ்வாறு எந்தவொரு கட்சியும் அரைவாசிக்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றாத நிலையில் சபைக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறும் நபர்கள் மேயர்/தலைவர் பதவிக்கும் ஏனைய பதவிகளுக்கும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.