ஒரு வாக்கு வித்தியாசம் காரணத்தால் மீள் வாக்கெண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும்

Report Print Navoj in தேர்தல்

தனது வட்டாரத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியில் தனக்கு முழு திருப்தியில்லாத காரணத்தினை தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன், இதற்கு தேர்தல் ஆணையாளரின் பதிலை எதிர்பார்த்திருப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையில் போட்டியிட்ட வேட்பாளர் குமாரசாமி காந்தராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிட்ட மேற்படி வேட்பாளர் குறித்த வட்டாரத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வட்டாரத்தில் வாக்களிப்பின் பின்னர் நடைபெற்ற வாக்கெண்ணும் பணியின்போது தேர்தல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்ட சில சட்டதிட்டங்களை சரியான முறையில் கடைப்பிடிக்கவில்லை.

அத்துடன், தபால் மூல வாக்கெண்ணும் போது தனது முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தனது கோரிக்கைக்கு அமைவாக இரண்டு வாக்குப் பெட்டிகள் மீள எண்ணப்படவில்லை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் தனக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.