உள்ளூராட்சி மன்றங்களின் பட்டியல் வேட்பாளர்களை நியமிக்க கோரிக்கை

Report Print Aasim in தேர்தல்
37Shares

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பட்டியல் வேட்பாளர்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

பட்டியல் மூலம் நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டியல் நியமனங்களின் போது பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.