தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

Report Print Aasim in தேர்தல்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐந்து வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களின் வைப்புத் தொகை அரசுடைமையாக்கப்படவுள்ளது.

அரசியல் கட்சி அல்லது சுயேட்சையில் போட்டியிட்டிருந்தாலும் ஒவ்வொரு வேட்பாளரும் தாம் போட்டியிட்ட வட்டாரத்தில் இருந்து ஐந்து வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்ததால் அவர்கள் செலுத்திய கட்டுப் பணம் அரசுடைமையாக்கப்படவுள்ளது.

அதே போன்று அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் மொத்த வாக்குகளில் ஐந்துவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் பட்டியல் வேட்பாளர்களின் கட்டுப்பணமும் இவ்வாறு அரசுடைமையாக்கப்படவுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 1500 ரூபாவும், சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் 2500 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தியிருந்தனர்.

இதற்கிடையே இவ்வாறு கட்டுப்பணத்தை பறிகொடுத்த பட்டியல் வேட்பாளர்களில் சிலர் தற்போது உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் ஐந்துவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெறும் சுயேட்சைக்குழுக்கள் மற்றும் கட்சிகளுக்கு பிரதிநிதிகள் வழங்கப்படக் கூடாது என்ற சரத்து திருத்தப்படவுள்ளது.