மாகாணசபை தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் பொதுஜன முன்னணி

Report Print Kamel Kamel in தேர்தல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாகாணசபை தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் விகிதாசார அடிப்படையிலோ அல்லது தொகுதிவாரியாக நடத்தப்பட்டாலோ அதனை எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் போன்றே மாகாணசபை தேர்தலுக்கும் வியூகம் வகுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.