மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இலங்கை அதிகாரிகள்

Report Print Ajith Ajith in தேர்தல்

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவர் மாலைதீவிற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் இன்று இடம்பெறுகின்றது. இந்த நிலையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவே குறித்த அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலாநிதி ரட்ணஜீவன் ஹோலே மற்றும் மேலதிக ஆணையாளர் ரசிக பீரிஸ் ஆகிய இருவரும் தெற்காசியாவின் தேர்தல் முகாமைத்துவ மன்றத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இணைய உள்ளனர்.

சார்க் அமைப்பின் அங்கத்துவ நாடுகள் இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளன. எனினும், இந்த கண்காணிப்பு பணிகளில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என அறியமுடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers