மாகாண சபை தேர்தல் தொடர்பில் தேர்தல் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிற்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பும் தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது தேர்தல் தொடர்பில் எந்த இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையென ஜே.வி.பியின் மேல்மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் பிற்போடப்படுவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.